கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனியாக வெளியில் வந்த இளவரசி மெர்க்கல் செய்த செயல்: வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in பிரித்தானியா

கர்ப்பமாக இருக்கும் மேகன் மெர்க்கல் லண்டனில் உள்ள ஒரு கல்லூரிக்கு தனியாக சென்ற நிலையில் முக்கிய சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்.

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் தற்போது கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரிக்கு மெர்க்கல் தனியாக சென்றுள்ளார்.

அங்குள்ள மாணவர்கள் மற்றும் தலைவர்கள் சந்தித்த மெர்க்கல் அவர்களுடன் உயர் கல்வியின் முக்கியத்துவங்களை குறித்து ஆலோசனை நடத்தியதோடு கலந்துரையாடினார்.

காமன்வெல்த் பல்கலைக் கழகங்கள் தொடர்பான சந்திப்பு இது என்பது முக்கிய விடயமாகும்.

கருப்பு நிற உடையில் கல்லூரிக்கு சென்ற மெர்க்கல் அங்குள்ள நாற்காலியில் உட்கார்ந்தபடி சில முக்கிய குறிப்புகளை எழுதி கொண்டதோடு மற்றவர்களின் பேச்சையும் கவனித்தார்.

இந்நிலையில் மெர்க்கல் கல்லூரியில் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்