கலப்பு இன பெண்ணை மணந்த இளவரசர் ஹரி ஒரு துரோகி: துப்பாக்கியுடன் வெளியான அதிர்ச்சி புகைப்படம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த நாசிக்கள் அமைப்பு ஒன்று இளவரசர் ஹரி தலை மீது துப்பாக்கி வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

Sonnenkrieg Division என்ற நாசிக்கள் அமைப்பினர் கலப்பு இன பெண் மேகன் மெர்க்கலை மணந்ததற்காக ஹரி சுடப்பட வேண்டும் என குறிப்பிடும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் ஹரியின் தலையின் அருகில் துப்பாக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், விரைவில் உங்களை சந்திக்கிறோம். இன துரோகி என எழுதப்பட்டுள்ளது.

அதாவது ஹரியின் மனைவி மேகன் மெர்க்கலின் தாய் ஆப்பிரிக்க - அமெரிக்க வம்சாவளியை சேர்ந்தவர், அதே சமயம் தந்தை dutch - irish வம்சாவளியை சேர்ந்தவர் என்பதாலேயே அந்த நாசிக்கள் அமைப்பினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நாசிக்கள் அமைப்பின் தலைவர் பெயர் பிரண்டன் ரூசல் என தெரியவந்துள்ளது.

ப்ளோரிடாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் கிடந்த வழக்கில் ரூசல் ஐந்தாண்டு சிறை தண்டனையை இந்த வருடம் பெற்றார் எனவும் தெரியவந்துள்ளது.

இது போன்ற முக்கிய தகவல்களை தனியார் செய்தி ஊடகம் ஒன்று சேகரித்துள்ள நிலையில் பொலிசாரிடம் தகவல்களை சேர்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்