லண்டனில் பாத்ரூமில் கொலை செய்யப்பட்டு கிடந்த கர்ப்பிணி பெண்: விசாரணையில் அடுத்தடுத்து வெளிவரும் உண்மை

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஏற்கனவே குழந்தைகள் உள்ள நிலையில், அடுத்து குழந்தை வேண்டாம் என்பதற்காக கணவன் கர்ப்பிணி மனைவியை கொலை செய்திருக்கும் சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Neasden பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் Ioan Campeanu(44).

இவருக்கு Andra Hilitanu(28) என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 31-ஆம் திகதி Ioan Campeanu அவசர உதவிக்கு தொடர்பு கொண்டு அவள் இறந்துவிட்டாள், நான் தான் அவளை கொலை செய்தேன், கத்தரியால் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவசர உதவி தொடர்பாளர் உடனடியாக குறித்த குடியிருப்புக்கு ஆம்புலன்சை அனுப்பியுள்ளார்.

ஆனால் அங்கு அவர் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து Ioan Campeanu-ஐ கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவருக்கு ஏற்கனவே குழந்தைகள் உள்ளதால், இவர் கர்ப்பமாக இருப்பது பிடிக்கவில்லை, அடுத்து குழந்தை வேண்டாம் என்பதற்காக கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது,

மேலும் இது தொடர்பாக பொலிசார் இவர்கள் இருக்கும் வீட்டிற்கு அருகில் இருக்கும் நபர் ஒருவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் சம்பவ நடந்ததற்கு முந்தைய தினம் அந்த வீட்டில் இருந்து ஒரு அலறல் சத்தம் வந்தது என்று கூறியுள்ளார்.

இதையடுத்து Andra Hilitanu-ன் உறவினர் Roxana Dragoi, அவர் Andra Hilitanu-ஐ கொலை செய்து சாப்பிட்டுவிடுவேன் என்று மிரட்டியதாக கூறியுள்ளார்.

இந்த கொலைக்கு இதுமட்டுமின்றி இன்னும் சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது Andra Hilitanu சமைப்பதில்லை எனவும், வீட்டை சுத்தமாக வைத்து கொள்ளமாட்டார் எனவும், இதன் காரணமாகவே இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும் என்று கூறப்படுகிறது.

இந்த தம்பதிக்கு மொத்தம் எத்தனை குழந்தைகள் என்பது குறித்து தெரிவிக்கவில்லை. இது தொடர்பான வழக்கு விசாரணை old bailey நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்