பிரித்தானியாவில் ஆண்காதலனுக்காக மனைவியை கொலை செய்த கணவன்! முதல் முறையாக வெளியான புகைப்படம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் காதலனுக்காக மனைவியை கொலை செய்த கணவன், அந்த ஆண் காதலனுடன் இருக்கும் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் Middlesbrough-ல் இருக்கும் Linthorpe பகுதியில் Mitesh Patel(37), இவரின் மனைவி Jessica(34) ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

கடந்த மே மாதம் Jessica மர்மான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கணவன் தான் மனைவியை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதற்காக அவர் தனியார் வணிக வளாகத்தில் பிளாஸ்டிக் பை ஒன்றை வாங்கி தமது மனைவியின் முகத்தை மூடி மூச்சுத்திணறலை ஏற்படுத்தி கொலை செய்ததும் விசாரணையில் உறுதியானது.

அதுமட்டுமின்றி மனைவியின் பெயரில் இன்சூரன்ஸ்கள் நிறைய இருப்பதால், அவரை கொலை செய்து, தான் காதலித்த ஆண் நபருடன் ஓட திட்டமிட்டிருந்ததும் அம்பலமாகியது.

இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படும் நிலையில், அந்த ஆண் நண்பர் யார் என்பது குறித்து அவர் தொடர்பான புகைப்படத்தை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

அதில் அந்த நபரின் பெயர் Amit Patel எனவும் அவர் ஒரு மருத்துவர் என்றும், பல ஆண்டுகளாக இருவரும் பேசி வந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

மனைவியை கொலை செய்வதற்கு முன்னர் Amit Patel-க்கு அவர் பல முறை மெசேஜில் பேசியுள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு இருவரும் ஒரு நீர்விழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அங்கு தான் அந்த புகைப்படத்தை எடுத்துள்ளனர்

மனைவி Jessica பற்றி கூறுகையில், அவர் கணவர் மற்றும் தன்னுடைய குழந்தைகள் மீது மட்டுமே அக்கறையாக இருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்