மேகன் மெர்க்கலால் உயிருக்கு ஆபத்து... துப்பாக்கி வாங்கப் போகிறேன்: பிரித்தானிய பெண்மணி வெளியிட்ட பகீர் தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியின் காதல் மனைவி மெர்க்கலின் ஆதரவாளர்களால் தமது உயிருக்கு ஆபத்து எனவும் தமது வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

கிறிஸ்டினா கெயின் என்ற 41 வயது பெண்மணி ஒருவரே மேகன் மெர்க்கல் ஆதரவாளர்களால் தமது உயிருக்கு அச்சுருத்தல் இருப்பதாக பகீர் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இவரது சகோதரியும் 47 வயதான Trina என்பவர் மீதும் குறித்த ஆதரவாளர்கள் கும்பல் வார்த்தை தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும், தங்களது வங்கிக் கணக்கை ஹேக் செய்து தொகையை கொள்ளையிட்டுள்ளதாகவும் இவர்கள் புகார் அளித்துள்ளனர்.

தங்கள் உயிர் மீது அச்சுறுத்தல் இருப்பதாக கூறும் கெயின், மேகன் மெர்க்கலை எதிர்ப்பது மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது என்றார்.

மேகன் மெர்க்கலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இணையத்தில் செயல்படும் இரு குழுவினரால் கண்டிப்பாக பிரித்தானியாவில் உயிர் பலி விழும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மெர்க்கலுக்கு ஆதரவாக இணையத்தில் களமாடும் "Megulators" என்ற முரட்டு குழுனருக்கும், மேகன் மெர்க்கலை பிரித்தானியாவில் இருந்து துரத்துவதே தங்கள் நோக்கம் என களமாடும் "Megxit" என்ற குழுவினருக்கும் இடையே கடும் வார்த்தை போர் நடந்து வருகிறது.

மெர்க்கலை இணையத்தில் தரக்குறைவாக விமர்சிக்கும் எவரையும் கடுமையாக தாக்கும் "Megulators" குழுவினருக்கு Sussex Squad என்ற பெயரும் உள்ளது.

சொந்த குடும்பத்தில் பிரச்னையை கிளப்பியவர், 2 முறை திருமணம் செய்து கொண்டு தோல்வி கண்டவர், காதலர்களை கைவசம் வைத்திருப்பவர், இவர் பிரித்தானிய அரச குடும்பத்திற்கு உகந்தவர் அல்ல என்பது Megxit குழுவினரின் வாதம்.

ஆனால் மேகனின் ஆதரவாளர்கள் மிக சாமர்த்தியமாக செயல்படுவதாகவும், எதிர்ப்பாளர்களை துல்லியமாக தாக்குவதாகவும் இணையத்தில் கருத்து உள்ளது.

இதனிடையே கிறிஸ்டினா கெயின் தமக்கு கொலை மிரட்டல் இருப்பதாக கூறி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும் தற்காப்புக்காக துப்பாக்கி ஒன்றையும் வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்