தமிழ் திரைப்பட பாணியில் மனைவியை கொன்ற கணவன்: பிரித்தானியாவை உலுக்கிய கொலை வழக்கில் அதிரடி திருப்பம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

காதலனுடன் தனிக்குடித்தனம் செல்ல மனைவிக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தி கொலை செய்த கணவனை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த வழக்கு சந்தேகமின்றி நிரூபணமாகியுள்ளதால் குற்றவாளி மிதேஷ் பட்டேல் என்பவருக்கு குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

தனியார் வணிக வளாகத்தில் இருந்து வாங்கிய பிளாஸ்டிக் பை கொண்டு தமது மனைவியின் முகத்தை மூடி மூச்சுத்திணறலை ஏற்படுத்தி கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த மே மாதம் Middlesbrough பகுதியில் உள்ள குடியிருப்பில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

இவரது மனைவி ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகில் மருந்தகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

மே 14 ஆம் திகதி தமிழ் திரைப்படம் ஆசை பாணியில் மனைவி பிளாஸ்டிக் பையால் கொலை செய்துவிட்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

மிதேஷ் பட்டேலின் ஆண் நண்பு காரணமாக ஜெசிகா உடனான திருமண வாழ்க்கை நாளுக்கு நாள் பிரிவை சந்தித்து வந்துள்ளது.

மட்டுமின்றி மொபைல் செயலி மூலம் ஆண்களிடம் பாலியல் உறவும் வைத்துக் கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், மிதேஷின் நெருங்கிய நண்பரும் மருத்துவருமான அமித் பட்டேலின் உதவியுடன் தங்களுக்கு பிள்ளை பெற்றுக் கொள்ளும் திட்டமும் மிதேஷுக்கு இருந்துள்ளது.

அமித் பட்டேலுடன் சிட்னியில் குடியேறவே மிதேஷ் தமது மனைவியை கொலை செய்துள்ளார். தமது மனைவி ஜெசிகா பெயரில் உள்ள காப்பீட்டு தொகையான 2 மில்லியன் பவுண்டுகள் தொகையை கைப்பற்றவும் திட்டமிட்டுள்ளார்.

ஆண்களுடனான உறவு தொடர்பில் பல முறை ஜெசிகாவுக்கும் மிதேஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்