வானத்தில் தெரிந்த பிரித்தானிய மகாராணியின் முகம்: அதிசய புகைப்படம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

புகைப்படக் கலைஞர் ஒருவர் மழை மேகங்களை புகைப்படம் எடுத்து, பின்னர் அவற்றை பார்த்துக் கொண்டிருக்கும்போது அவற்றில் ஒன்றில் பிரித்தானிய மகாராணியாரின் முகம் தெரிவதைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

Malvern பகுதியில் Jan Sedlacek (39) என்னும் புகைப்படக் கலைஞர் மழை மேகங்கள் பெரு மழை பொழிய இருப்பதை அறிந்து அதைப் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்.

பின்னர் தனது அலுவலகத்தில் அவற்றை எடிட் செய்து பார்த்துக் கொண்டிருக்கும்போது அவற்றில் ஒன்றில் மகாராணியாரின் முகம் தெரிவதைக் கண்டார்.

பின்னர் அந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட, அதைக் கண்ட பலரும் உண்மையாகவே மகாராணியாரின் முகம் தெரிகிறது என்று கூறி அந்த படத்தை லைக் செய்தனர்.

அந்த புகைப்படத்தை தான், உயர்திரு மேகங்களின் மகாராணியார் என்று அழைப்பதாகக் கூறுகிறார் அவர்.

தான் அந்த புகைப்படத்தைக் கண்டு சந்தோஷப்பட்டது போல, அந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் நிச்சயம் சந்தோஷப்பட்டிருக்கமாட்டார்கள் என்று கூறும் Jan, காரணம் அந்த மேகம் அந்த பகுதியில் மிகப்பெரிய மழையை உருவாக்கியதாக வேடிக்கையாக தெரிவிக்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்