இளவரசர் சார்லசுக்கு மகாராணியார் கொடுத்துள்ள மிகப்பெரிய பொறுப்பு: மன்னராவதற்கு முன்னோட்டமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் சார்லஸ், மன்னராவதற்கு முன்னோட்டம் என கருதப்படும் பெரிய பொறுப்பு ஒன்றை பிரித்தானிய மகாராணியார் இன்று அவரிடம் ஒப்படைத்துள்ளது உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் H.W. புஷ்சின் இறுதிச்சடங்கில் பெரும் பொறுப்பு ஒன்றை ஏற்க இருக்கிறார் இளவரசர் சார்லஸ்.

பிரித்தானிய அரியணையின் அடுத்த வாரிசான சார்லஸ், வாஷிங்டனில் நடைபெறும் முன்னாள் அமெரிக்க அதிபரின் இறுதிச்சடங்கில், மகாராணியாரின் பிரதிநிதியாக கலந்துகொள்கிறார்.

பொதுவாக இத்தகைய நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொள்ளும் மகாராணியார், இம்முறை அந்த பொறுப்பை தனது மகனிடம் ஒப்படைத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சமீப காலமாக தான் பங்குகொள்ளும் நிகழ்ச்சிகளை குறைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ள மகாராணியார், இளவரசர் சார்லசுக்கு கொடுத்துள்ள பொறுப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

அரண்மனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், இளவரசர் சார்லஸ் முன்னாள் அமெரிக்க அதிபரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சி வாஷிங்டனில் உள்ள The National Cathedralஇல் நடைபெறும்.

அதில் இளவரசர் சார்லஸ் மகாராணியாரின் பிரதிநிதியாக கலந்து கொள்வார் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

சமீபத்தில் பிரபல பிரித்தானிய பத்திரிகை ஒன்று, பிரித்தானிய இளவரசர் வில்லியம், தனது தந்தையான இளவரசர் சார்லசின் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கான ஆயத்த நடவடிக்கைகளாக, ரகசிய கூட்டங்கள் நடத்துவது குறித்து செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்