பிரித்தானிய இளவரசி மெர்க்கலுக்கு பேய் பிடித்து விட்டது.... அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்: வெளியான தகவல்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய அரச குடும்பத்து மருமகளாகி நாள் முதல் மேகன் மெர்க்கலுக்கு பேய் பிடித்துவிட்டது என பத்திரிகையாளரும், மெகன் மெர்க்கலின் நண்பருமான Piers Morgan தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் மற்றும் தொகுப்பாளரான Piers Morgan, வணக்கம் பிரித்தானியா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, மேகன் மெர்க்கல் பிரபல நடிகையாக இருந்தபோதே எனக்கு அவரை நன்றாக தெரியும். அவர் இளவரசர் ஹரியுடன் 2016 ஆம் ஆண்டு டேட்டிங் செல்ல ஆரம்பித்தவுடன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

மெர்க்கல் எப்போது அரசகுடும்பத்து மருமகள் ஆனாரோ அன்றே அவருக்கு பேய்பிடித்துவிட்டது, அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளும் அதனை பிரதிபலிக்கின்றன. அவரது ஒவ்வொரு அசைவுகளும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.

இன்னும் சொல்லப்போனால், அவர் அரச குடும்பத்து மருமகளாக நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் ஒரு சிறந்த நடிகை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் குடும்ப வாழக்கையிலும் நடித்துக்கொண்டிருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்