13 வயது இளையவரை காதலித்த பெண்: திருமண நேரத்தில் காத்திருந்த ஷாக்.. இறுதியில் நடந்தது என்ன?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் இரண்டு வாரத்தில் உயிரிழக்க போகும் பெண் தன்னை விட 13 வயது குறைவான காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Berkhamsted நகரை சேர்ந்தவர் தஷா கோர்லி (36). இவருக்கு கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தஷாவுக்கு குடல் புற்றுநோய் இருப்பது தெரிந்தது.

இதற்கான சிகிச்சையை அவர் எடுத்தார். ஆனால் புற்றுநோயானது தஷாவின் நுரையீரல் மற்றும் கல்லீரலுக்கு பரவியது.

இதையடுத்து அவர் இன்னும் இரண்டு வாரத்தில் மரணமடைந்து விடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

தஷாவும், டேனியல் (23) என்பவரும் கடந்த 2015லிருந்து காதலித்த நிலையில் கடந்தாண்டு திருமணம் செய்யவிருந்தனர். அந்த சமயத்தில் தஷாவுக்கு புற்றுநோய் ஏற்பட்டதால் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் தனது இறுதி ஆசையாக தனது காதலன் டேனியலை கரம் பிடிக்க முடிவு செய்தார் தஷா.

அதன்படி தஷா தங்கியிருந்த மருத்துவமனையிலேயே திருமண ஏற்பாடுகள் நடந்தது.

தஷாவின் திருமண நிகழ்வுக்கு நிதியுதவி இணையதளம் மூலம் கோரப்பட்டது.

இதையடுத்து திருமண வீடியோ, புகைப்படங்களை இலவசமாக எடுத்து தர இருவர் முன்வந்தனர். அதே போல பூக்கள், கேக்குகள் மற்றும் உணவுகளை இலவசமாக கொடுக்க மூன்று பேர் முன்வந்தனர்.

எல்லா விடயமும் தயார் ஆன நிலையில் திருமணம் விமர்சியாக நடைபெற்றது.

இது குறித்து டேனியல் கூறுகையில், இந்த நாள் அருமையானதாக இருந்தது, இவ்வளவு அழகாக இதுவரை நான் தஷாவை பார்த்ததேயில்லை என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்