பிரித்தானிய அரச குடும்ப பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து வெளியான தகவல்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய அரசகுடும்பத்து மருமகள்களின் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அரசகுடும்பம் குறித்து பரவும் தகவல்கள் அனைத்து பொய்யானவை என கெசிங்டன் அரண்மனை அறிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேகன் மெர்க்கலின் அணுகுமுறையால் மூத்த மருமகள் கேட் மிடில்டன் மனம் உடைந்துள்ளதாகவும், இருவருக்கும் ஒத்துப்போகாத காரணத்தால் சகோதரர்களாக வில்லியம் மற்றும் ஹரிக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

மேலும், மெர்க்கலை அரசகுடும்பத்து மருமகளாக ஏற்றுக்கொள்வதற்கு எந்தவித நடவடிக்கைகளும் தனது குடும்பத்தினரால் மேற்கொள்ளப்படவில்லை என்று கணவர் ஹரி வேதனையடைந்துள்ளார்.

இப்படி இரு பெண்களுக்கும் இடையே நிலவும் கருத்துவேறுபாடு தொடர்பான செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில், அரசகுடும்பத்தின் செய்தி தொடர்பாளர் இந்த தகவல்கள் பொய்யானவை என கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

செய்தி தொடர்பாளர் கூறியதாவது, அரசகுடும்பம் பற்றி பரவும் வதந்திகளை ஒருபோதும் கண்டுகொள்வதில்லை. இரு மருமகள்கள் பிரச்சனை குறித்து வெளியாகும் செய்திகள் அனைத்தும் வதந்தி என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்