ஆடை இன்றி புகைப்படத்திற்கு முகம் காட்டிய பிரித்தானிய பெண்கள்: நெகிழ்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் கென்ட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம மக்கள் தொண்டு நிறுவனம் ஒன்றிற்காக நிர்வாண புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கென்ட் மாவட்டத்தில் உள்ள Iwade கிராம மக்களே இந்த நிர்வாண நாட்காட்டிக்கு என தங்கள் ஆடைகளை களைந்து போஸ் அளித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு வெளியிடப்படும் இந்த நிர்வாண நாட்காட்டி மூலம் திரட்டப்படும் நிதியானது ஆதரவற்ற சிறார்கள் மற்றும் பூனைகள் பாதுகாப்புக்காக செலவிடப்படும் என கூறப்படுகிறது.

மேலும் குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக திரட்டப்படும் நிதியை உள்ளூரில் அமைந்துள்ள தேவாலயத்தில் கழிப்பறை வசதிக்காகவும் பயன்படுத்த உள்ளனர்.

குறித்த கிராமத்தில் அழகு நிலையம் ஒன்றை செயல்படுத்தி வரும் Laura Cheeseman என்பவரே இந்த திட்டமுடன் கிராம மக்களை அணுகியுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக குறித்த கிராமத்தில் குடியிருக்கும் Laura Cheeseman, தமது பேஸ்புக் பக்கத்தில் குறித்த திட்டத்தை விளம்பரப் படுத்தியுள்ளார்.

ஆனால் எதிர்பார்த்ததை விடவும் வரவேற்பு இருந்ததாக கூறும் Laura Cheeseman, ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 24 பேருடன் இரண்டு வார காலத்தில் நாட்காட்டிக்கான புகைப்படங்களை பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்காட்டியின் விலை 12 பவுண்டுகள் என குறிப்பிட்டுள்ள லாரா, திங்கள் முதல் விற்பனைக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்