உங்கள் மகனுக்கு மன நலம் சரியில்லை... கொன்று விடுங்கள்: பிரித்தானிய தாயாரின் நெஞ்சை உலுக்கும் அனுபவம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் 5 வயது மகனை கொன்று விட்டு நீங்களும் தற்கொலை செய்து கொள்ளுங்கள் என தாயார் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் யார்க்ஷயர் பகுதியில் உள்ள டோன்ஸ்கஸ்டரில் குடியிருக்கும் 30 வயதான லோரன் லக்கி என்பவரின் அனுபவமே மனசாட்சியை உலுக்கியுள்ளது.

ஆட்டிஸத்தால் அவதிப்பட்டுவரும் 5 வயது சிறுவனிடம் அண்டை வீட்டாரின் மன நிலையே அந்த தாயாரை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

தமது மகனை பல மணி நேரம் கொடூரமாக கிண்டல் செய்துள்ளதும் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளதையும் வருத்தமுடன் லோரன் குறிப்பிட்டுள்ளார்.

உனது பிள்ளைக்கு பைத்தியம், ஏன் எங்களின் அமைதியை கெடுக்கிறாய்? அவனை கொன்று விட்டு நீயும் தற்கொலை செய்து கொள் என மிரட்டியுள்ளனர்.

லூகாஸ் மிலன் என்ற தமது 5 வயது மகன் ஆட்டிஸம் பாதிக்கப்பட்டு மிகவும் அல்லல் படுவதாக குறிப்பிடும் லோரன்,

அண்டை வீட்டாரின் குறித்த செயற்பாட்டை தாமே பதிவு செய்து வெளியிட்டு தமது நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.

நவம்பர் 23 ஆம் திகதி அண்டை வீட்டாரின் இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு முன்பு தாமும், தமது கணவரும் அவர்களுடன் நல்ல நட்பில் இருந்துள்ளதாக கூறும் லோரன்,

பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி வருவதாகவும், ஒரு அளவுக்கேனும் நிதி திரட்டிய பின்னர் டோன்ஸ்கஸ்டரில் இருந்து தமக்கும் குடும்பத்தினருக்கும் வேறு பகுதிக்கு குடியேற முடியும் எனவும், தற்போது பொருளாதார ரீதியாக நெருக்கடியில் இருப்பதாகவும் லோரன் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி பெயர் வெளிப்படுத்த விரும்பாத அந்த அண்டை வீட்டாரால் தமது பிள்ளையின் உயிருக்கு ஏதேனும் அபாயம் ஏற்படலாம் என தாம் அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்