பிறந்தநாள் கொண்டாடவிருந்த இருவர் அடுத்தடுத்து பலியான பரிதாபம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஸ்காட்லாந்தில் பிறந்தநாள் கொண்டாடவிருந்த இருவர் அடுத்தடுத்து நடந்த விபத்தில் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆண்ட்ரூ பார்டன் - லின் ட்ரேவர் தம்பதியினரின் கடைசி மகள் எம்மா பார்டன் (20), ஸ்ட்ரோம்னஸில் உள்ள ராயல் ஹோட்டலில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தன்னுடைய பிறந்தநாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாட திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில் காரில் சென்றுகொண்டிருந்த எம்மாவின் கார் மீது, மற்றொரு காரில் வந்த நபர் வேகமாக மோதியுள்ளார்.

இதில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட எம்மா ஹெலிகாப்டர் உதவியுடன் பால்ஃபோர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

அடுத்த சில நிமிடங்களில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல Bettyhill கிராமத்தை சேர்ந்த 19 வயதான கானர் குக், கல்லூரியில் படித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமையன்று பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டிருந்த கானர், "z" வடிவிலான வளைவுப்பகுதியில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

பிறந்தநாள் கொண்டாடவிருந்த இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers