இளவரசி மெர்க்கல் குழந்தை பெறபோகும் மகப்பேறு பிரிவின் ஒருநாள் வாடகை எவ்வளவு? ஆச்சரிய தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

மேகன் மெர்க்கல் குழந்தை பெற்றெடுக்க போகும் மகப்பேறு பிரிவின் வாடகை விவரங்கள் தெரியவந்ததோடு, அதன் சுகாதாரம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரியவந்துள்ளது.

பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த பலரும் செண்ட் மேரிஸ் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் தான் குழந்தை பெற்றெடுத்தார்கள்.

இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனுக்கு கூட அங்கு தான் பிரசவம் நடந்தது.

இந்நிலையில் கர்ப்பமாக உள்ள இளவரசர் ஹரியின் மனைவி மெர்க்கலுக்கும் அங்கு தான் பிரசவம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் ஒரு இரவு தங்குவதற்கு £5,900 முதல் £7,500 வரை வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த மகப்பேறு பிரிவின் சுகாதாரத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும் என Food Standards Agency என்னும் சுகாதார அரசு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கையில், மகப்பேறு பிரிவுக்கு 5-க்கு 2 மதிப்பெண்கள் கொடுக்கிறோம்.

இங்கு வசதிகள் மற்றும் கட்டிடத்தின் தூய்மையான சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

அதே சமயம் சுகாதாரமாக உணவுகளை கையாளுதல் மிகவும் நன்றாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்