பிரித்தானிய அரச குடும்பத்து மருமகள்களில் கேட் மிடில்டனின் சொத்து அதிகமா? மெர்க்கலின் சொத்து மதிப்பு அதிகமா?

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய அரச குடும்பத்தின் மருமகள்கான கேட் மிடில்டன் மற்றும் மேகன் மெர்க்கல் ஆகிய இருவரும் வெவ்வேறு குடும்ப பின்னணியை சேர்ந்தவர்கள்.

வெவ்வேறு குடும்ப பின்னணியில் இருந்து வந்த இவர்கள், தற்போது ஒரே குடும்பத்தில் வசிக்கிறார்கள்.

அரச குடும்பத்து மருமகளாகிய நாள்முதல் கேட் மிடில்டன், சர்ச்சையில் எதுவும் சிக்காமல் இருந்து வருகிறார். 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டில் உலகில் முக்கியத்துவம் வாய்ந்த பெண்களின் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்தார்.

திருமணத்திற்கு முன்னர் இவர், குழந்தைகள் பொருள் விற்பனை பிரிவில் 6 மாதம் பணியாற்றியுள்ளார். மேலும், தனது தொந்தையின் தொழிலுக்கும் உதவியதன் மூலம் திருமணத்திற்கு முன்னர் இவரது சொத்து மதிப்பு 7 மில்லியன் என கணக்கிடப்பட்டது.

மேகன் மெர்க்கல் பிரபல நடிகை ஆவார். விளம்பரங்கள் மற்றும் அதிக படங்களில் நடித்ததன் மூலம் திருமணத்திற்கு முன்னர் இவரது சொத்து மதிப்பு 5 மில்லியன் டொலர் ஆகும்.

இருவரது வயதும் 36 ஆகும். சொத்து மதிப்பில் மெர்க்கலை விட கேட் மிடில்டன் முன்னணியில் உள்ளார். தற்போது, அரசகுடும்பத்து உரிமைகளிலும் கேட் மிடில்டனே முன்னணியில் உள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers