தமிழ் பெண்ணை திருமணம் செய்த பிரித்தானியா இளைஞர் இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா? ஆச்சரிய தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

நாம் நம் பாரம்பரியத்தை மறந்து பீட்சா, பர்கர் என பன்னாட்டு உணவுகளை தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் பிரித்தானியாவை பிறப்பிடமாகக் கொண்ட கிருஷ்ணா, தமிழ் கலாச்சாரத்தின் மீதும், இயற்கை விவசாயத்தின் மீதும் ஆர்வம் கொண்டு தமிழ் பெண்ணை திருமணம் செய்து தமிழ்நாட்டின் மருமகன் ஆனார்.

தற்போது புதுச்சேரி அடுத்த ஆரோவி பகுதியில் 6 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். பாரம்பரிய இயற்கை விவசாயத்தின் மீதும், உணவின் மீதும் தீரா காதல் என்றே கூறலாம்.

அந்த காதலால் தன்னுடைய நிலத்தில் விளையும் காய், பழங்களை கொண்டு இயற்கை உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது இயற்கை உணவை விரும்பி சாப்பிடும் வெளிநாட்டவர்கள் ஏராளம்.

இந்த மண்ணை இவர் தெய்வமாக பார்க்கிறார்.

தமிழ்நாட்டு மண்ணின் பெருமை குறித்து அவர் கூறுகையில், சென்னையில் தண்ணீர் குடிப்பதற்கு லாரி வருகிறது. இப்படி எத்தனை வருடம் இருக்கமுடியும்.

தண்ணீர் தான் மிகவும் முக்கியம். அதுமட்டுமா எந்த காய்களில் பார்த்தாலும் மருந்து இருக்கிறது. இப்படி இருக்கும் காய்களை சாப்பிடும் போது புற்றுநோய், டையாபடிஸ், உயர் இரத்த அழுத்தம் வரும்.

நாம்முடைய இயற்கை வழி பின்னோக்கி சென்றுவிட்டது. இயற்கை காய்களை சாப்பிடுங்க, தமிழ் கலாச்சாரத்தில் இருக்கும் வாழை பூ, வாழை தண்டு, சுண்டைக்காய் போன்றவை மிகவும் உடலுக்கு நல்லது, அது எல்லாம் சாப்பிடுங்க, நம்முடைய மண் தான் தெய்வம், அதை பார்த்து கொள்ள வேண்டும்.

இப்போது நான் என்னுடைய தோட்டத்தில் கிடைக்கும் காய்களை சமைத்து தரும் போது அவ்வளவு ருசி இருக்கும், ஆனால் கடைகளில் அது இருக்காது.

மேலும் தற்போது இருப்பவர் நாம் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். அது எல்லாம் ஒரு மாயை அவ்வளவு தான் வரும் போகும்.

பிரித்தானியாவில் சாப்பட்டு டேபிளில் பீர் தான் கலாச்சாரம், நான் ஒரு வெள்ளைக்காரம் எனக்கு என்ன தெரியும் என்னை விட தமிழ் நாட்டு மக்களுக்கு நிறைய தெரியும், என்னுடைய மாமனார் விவசாயி, அதை நான் மீட்டு கொண்டு வர முயற்சிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இவர் மனைவி தற்போது என்ன செய்கிறார், அவர் பெயர் என்ன என்பது குறித்து தகவல் கிடைக்கவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்