துடிதுடித்து உயிருக்கு போராடிய தந்தை: போனில் பேசிக்கொண்டிருந்த 7 வயது மகன்! அதிர்ச்சியில் உறைந்த தாய்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த தந்தையை புத்திசாலித்தனமாக செயல்பட்டு, 7 வயது மகன் காப்பாற்றியுள்ள ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த 28 வயதான டேன் என்பவருக்கு இரண்டு மகன்கள் மகன்கள் உள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற அன்று டேன் மனைவி பெக்கி (26) பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றிருக்கிறார்.

அப்போது வீட்டில் திடீரென மயங்கிவிழுந்த டேன் பேச்சில்லாமல் துடிதுடித்துள்ளார். மறுபுறம் அவருடைய இரண்டாவது மகன் பிரெட் சாப்பிட ஜாம் இல்லையென்று அழுதுகொண்டிருந்துள்ளான்.

தந்தை கிடக்கும் நிலையை பார்த்த அவருடைய மூத்த மகன் ஹெய்டன், பொறுமையாக பொலிஸாருக்கு போன் செய்துள்ளான்.

போனை எடுத்த பொலிஸார், உன்னுடைய தந்தை இறந்துவிட்டாரா? என கேட்டுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த சிறுவன், இல்லை அவர் சத்தமிடுகிறார் என கூறியுள்ளான். மேலும் அவர் மூச்சுவிடுகிறாரா என பொலிஸார் கேட்டதற்கு, மூச்சுவிடுகிறார். ஆனால் என்னுடன் பேச மாட்டேங்கிறார் என கூறியுள்ளான்.

இதற்கிடையில் வீட்டிற்கு வந்த பெக்கி, நீரிழிவு நோயால் கணவர் போராடிக்கொண்டிருப்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே காதில் போனை வைத்திருந்த மகனிடம் இருந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க முயன்றுள்ளார்.

அதற்கு பொலிஸார் உங்களுடைய வீட்டை நோக்கி ஆம்புலன்ஸ் வந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே உங்களுடைய மகன் தகவல் தெரிவித்துவிட்டார் என கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து டேன் கூறுகையில், என்னுடைய மகன் ஹெய்டனை நினைக்க என பெருமையாக இருக்கிறது. நாங்கள் கூறியபடியே செய்து, என் உயிரை காப்பாற்றியுள்ளான் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers