வைரஸ் தாக்குதலுக்கு பயந்து ஹரியுடன் செல்ல மறுத்த மேகன்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மெர்க்கல் ஜிகா வைரஸ் தாக்குதலுக்கு பயந்து, ஹரியுடன் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் செல்ல மறுப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய இளவரசர் ஹரி (34), தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வருகிறார். மேகன் இல்லாமல் தனியாகவே இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை அவர் முடித்துள்ளார்.

அரச முறை பயணத்தில் ஹரி மட்டும் தான் செல்வார் என கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. ஆனால் அரண்மனை சேவகர்கள் தம்பதியர் இருவரும் செல்ல வேண்டியிருப்பதாகக் கூறுகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவின் சாம்பியா பகுதியில் ஜிகா வைரல் தாக்குதல் இருக்கும் என்பதால், அதற்கு பயந்து மேகன் பயணத்திற்கு வர மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், ஹரியையும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியதாகவும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் தங்கியிருக்கும் மேகன், தன்னுடைய தாய் டோரியாவுடன் பொழுதை கழித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக ஹரி - மேகன் இணைந்து அவுஸ்திரேலியா, பிஜி,டோங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அரச முறை பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

வசந்த காலத்தில் முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 37 வயதான மேகன், குழந்தைகளை தாக்கும் ஜிகா வைரஸ் தாக்குதலில் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறித்தியதால் தான் ஹரியுடன் தென் ஆப்பிரிக்கா செல்லவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்