லண்டனில் இந்த உணவுகளுக்கு விரைவில் தடை! 44 சதவீத குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் குளிர்பானங்கள் போன்ற ஐங் புட் உணவுகள் உடல் பருமன் ஏற்பட காரணமாக இருப்பதால் ரயில், பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக்களில் இது தடை செய்யப்படவுள்ளது.

இது குறித்து லண்டன் நகர மேயர் சாதிக் கான் கடந்த வெள்ளிக்கிழகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 2019-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

பேருந்துகள், சுரங்க ரயில்கள் மற்றும் அனைத்து ரயில்கள் மற்றும் சில ரயில்நிலையங்கள் உள்ளிட்ட லண்டனின் பொதுப் போக்குவரத்து அனைத்திலும் ஜங்க் புட் என அழைக்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

இத்தடை உத்தரவு வரும் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து அமல்படுத்தப்படும். இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டதில் 82 சத வீத மக்கள் ஜங் புட் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுக்கு தடை விதிக்க தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

ஜங்புட் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆல்கஹால் இல்லாத குளிர்பானங்கள் மற்றும் தித்திப்பான குளிர்பானங்கள், சீஸ்பர்கர், சாக்கலேட் பார்கள் மற்றும் உப்பிடப்பட்ட முந்திரி, பாதாம்போன்ற பயறுகள் போன்றவற்றில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு மிக அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகைய உணவுகளினாலேயே உடல் பருமன் சதாரணமாக ஏற்படுகிறது. முக்கியமாக குழந்தைப் பருவ உடல்பருமனில் இவ்வுணவுகள் பெரும்பங்கு வகிக்கிறது.

பிரித்தானியாவின் மற்ற அனைத்துப் பகுதிகளையும்விட லண்டனில்தான் குழந்தைப் பருவ உடல்பருமன் அதிக அளவில் மிக மோசமாக காணப்படுவதாக கூறப்படுகிறது.

லண்டனில் 11 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளில் இந்த ஆண்டு மட்டுமே 44 சதவீதக் குழந்தைகளுக்கு உடல்பருமன் திடீரென அதிகஅளவில் ஏற்பட்டுள்ளதாகவும் லண்டன் பெருநகரத்தின் வடமேற்கில் உள்ள புறநகர் பகுதியான லண்டன் பாராவ் ஆப் பிரென்ட்டில் இது அதிக அளவில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்