தாயுடன் பாலியல் உறவு வைக்க மகனை அடித்து வற்புறுத்திய தந்தை: கூறிய வினோத காரணம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் தந்தை ஒருவர் மாற்றான் தாயுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளுமாறு, தன்னுடைய மகனை அடித்து கொடுமைப்படுத்தியுள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த ரிச்சர்ட் டவுலிங் என்ற தந்தை தன்னுடைய 11 வயது மகனை, பாலியல் படங்கள் பார்க்க வைத்து மாற்றான் தாயுடன் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுவனை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

பல வருடமாக நடந்து வந்த இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்ட பொலிஸார், சிறுவன் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடனே குழந்தைகள் நலமையத்தில் சிறுவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அங்கு சிறுவன் தனக்கு நடந்த சம்பவம் பற்றி விவரித்துள்ளான். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், சிறுவனின் தந்தை ரிச்சர்ட் மற்றும் மாற்றான் தாய் அனெட் பிரேக்ஸ்ஸ்பரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அங்கு நீதிபதியிடம், என்னுடைய மகன் சிறுவயதிலே ஒரு பெண்ணை போல நடந்துகொள்ள ஆரம்பித்தான். அவன் எங்கே ஒரு ஓரினசேர்க்கையாளராக மாறிவிடுவானோ என்ற பயம் எனக்குள் ஏற்பட்டது. அவனை நல்வழிப்படுத்துவதற்காகவே அப்படி செய்தேன் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுவனின் தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சிறுவனை பலமுறை வற்புறுத்தி கொடுமைப்படுத்திய அனெட் பிரேக்ஸ்ஸ்பருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தற்போது 36 வயதை அடைந்திருக்கும் டேனியல் அவனுடைய தந்தையின் கூறியதை போலவே ஒரு ஓரினசேர்க்கையாளராக மாறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், என் வாழ்நாளில் நான் அடைந்த துயரங்களை மறக்கவே முடியாது. என்னுடைய அப்பாவி தனத்தை பயன்படுத்தி அவர்கள் என்னை துஸ்பிரயோகம் செய்தனர்.

அனெட் பயன்படுத்தும் வாசனை திரவியம் நான் கடைக்கு செல்லும் பகுதிகளில் யாரேனும் அடித்திருந்தால், நான் பட்ட துன்பங்கள் அனைத்தும் என்னுடைய நினைவிற்கு வந்துவிடும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்