பிரித்தானிய ராஜ குடும்பத்திற்குள் ஒரு புது வரவு?: அதிர்ச்சியா மகிழ்ச்சியா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய ராஜ குடும்பத்தில் இன்னும் சிறிது காலத்திற்குள் ஒரு திருமணம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், குடும்பத்திற்குள் வரும் புது வரவு அதிர்ச்சியைக் கொண்டு வந்துள்ளதா அல்லது மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளதா என்பது ராஜ கும்பத்தினருக்கு மட்டும்தான் வெளிச்சம்.

சமீபத்தில் திருமணமான பிரித்தானிய இளவரசி யூஜீனின் சகோதரியான இளவரசி பீட்ரிஸ்தான் இந்த குழப்பங்களுக்கு காரணமானவர்.

நான்கு மாதங்களுக்குமுன் இளவரசி பீட்ரிஸ்சின் நீண்ட கால காதலரான Dave Clark, Lynn Anderson என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

பத்து வருடங்கள் காதலித்த இளவரசி பீட்ரிஸ்சும் Clarkம் திடீரென 2016இல் பிரிந்தனர்.

இந்நிலையில் திடீரென இளவரசி பீட்ரிஸ், சென்ற வாரத்தில் Edoardo Mapelli Mozzi என்பவர் தன்னுடைய காதலர் என அறிவித்தார்.

அந்த அறிவிப்பு பீட்ரிஸ்சின் குடும்பத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, காரணம், Edoardoவை பீட்ரிஸ்சின் குடும்பத்தினர் மிக நீண்ட காலமாக நன்கறிவார்கள்.

எனவே அவர் பீட்ரிஸ்க்கு காதலராக வருவதில் அவர்களுக்கு மகிழ்ச்சியே.ஆனால் இந்த அறிவிப்பினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் இருக்கிறது.

அது Edoardoவுடன் சேர்ந்து வாழ்ந்து அவரது இரண்டு வயது குழந்தைக்கும் தாயான Dara Huangஇன் குடும்பம்.

ஆறு மாதங்களுக்கு முன்பே Edoardoவும் Dara Huangம் பிரிந்து விட்டதாக செய்திகள் வந்தாலும், இந்த சம்பவம் மிகவும் தாமதமாகத்தான் Dara Huangன் குடும்பத்தாருக்கு தெரிய வந்திருக்கிறது.

Dara Huangஇன் தாய் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டார். இருவரும் மகிழ்ச்சியாகத்தானே இருந்தார்கள், என்ன நடந்தது என்று தெரியவில்லையே என அங்கலாய்க்கும் அவருக்கு Dara Huang, லண்டனிலுள்ள Edoardoவின் வீட்டை விட்டு வெளியேறியபோது தங்க இடமின்றி தனது தோழி ஒருவரின் வீட்டில் அவரது சோஃபாவில் படுத்துறங்கிய செய்தியைக் கேட்டதும் இதயமே உடைந்து விட்டது போலிருந்திருக்கிறது.

ஒரு காலத்தில் குடும்பப் பின்னணி, மரபு, பரம்பரை எல்லாம் பார்த்து திருமணம் செய்த ராஜ மரபினரின் வழக்கங்களை எல்லாம் இளம் தலைமுறைதான் மதிப்பதில்லையே, எனவே எதுவும் நடக்கலாம் என்கின்றனர் சிலர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்