அம்மா, நான் ஆவிகளை பார்க்கிறேன்: ஒரு திகில் செய்தி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவைச் சேர்ந்த மூன்று வயதான ரோஸலின் தன் தாயிடம் பள்ளியில் நடந்த சம்பவங்கள் உட்பட பல விடயங்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது சாதரணமாக, அம்மா, எனக்கு ஒரு புது தோழி கிடைத்திருக்கிறாள் என்று கூற, அவளது தாயான ரெபேக்கா இவான்சும் அப்படியா சந்தோஷம், அவள் பெயர் என்ன என்கிறார்.

உடனே ரோஸலின், அவள் பெயர் மெட்டில்டா, அவள் நம் வீட்டில்தான் இருக்கிறாள் என்று கூற தாய்க்கு ஒன்றும் புரியவில்லை.

ரோஸலினோ தொடர்ந்து அவள் இறந்து விட்டாள் அம்மா, எனக்கு இன்னொரு நண்பனும் இருக்கிறான், அவன் பெயர் அலெக்ஸ், அவனும் இறந்து விட்டான், அவர்கள் இருவரும் நம் வீட்டில்தான் இருக்கிறார்கள் என்று கூற ரெபேக்காவுக்கு தூக்கி வாரி போட்டிருக்கிறது.

இதற்கும் முன்பும் ரோஸலின் 18 மாதக் குழந்தையாக இருக்கும்போது, அம்மா பாருங்கள் எவ்வளவு ஆடுகள் நிற்கின்றன என்று கூற ரெபேக்கா வந்து பார்க்கும்போது அங்கு ஆடுகள் எதுவுமே இல்லை.

அவர்கள் வசிக்கும் வீடு ஆடுகள் வளர்க்கும் இடமாக இருந்ததை ரெபேக்கா நன்கறிந்திருந்தார்.எனவே இது என்ன, ரோஸலின் ஏன் இப்படிக் கூறுகிறாள் என்பதை அறிய முடிவு செய்திருக்கிறார் ரெபேக்கா, அவர் ஒரு பத்திரிகையாளர்.

பழைய சென்சஸ் ரெக்கார்டுகளை எடுத்து ஆராய்ந்த ரெபேக்காவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.ஆம், 1861ஆம் ஆண்டு ரெக்கார்டுகள், அந்த வீட்டில் அலெக்ஸாண்டர் டர்னர் என்னும் பையன் வசித்ததைக் காட்டின.

மேலும் ஆராய்ச்சியை தொடர்ந்தார் ரெபேக்கா.அதே வீட்டில் 30 ஆண்டுகளுக்குப்பின் மெட்டில்டா எனும் பெண் 1891ஆம் ஆண்டு வாழ்ந்ததையும் ரெக்கார்டுகள் உறுதி செய்தன.

என்ன செய்வதென்று தெரியாமல் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்ட ரெபேக்கா, தொடர்ந்து ஆய்வுகள் குறித்து படிக்கும்போது, ஐந்து பிரித்தானியர்களில் ஒருவர் ஆவிகள் இருப்பதை உணந்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிப்பதை அறிந்து கொண்டார்.

பின்னர் ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் Jackie Dennison என்னும் ஒருவர் ரோஸலின் கூறியவை எல்லாமே உண்மைதான் என்பதை உறுதி செய்தார்.

Jackie Dennison, ரெபேக்காவிடம் அந்த ஆவிகளைப் பற்றி கவலைப்படவேண்டாம், நீங்கள் ஒரு குடும்பமாக அந்த வீட்டில் வாழ்வது அவற்றிற்கு பிடித்திருப்பதால்தான் அவை அந்த வீட்டில் இருக்கின்றன என்னும் உண்மையை அறியும்போது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்