விமானத்தில் மூன்று இருக்கையில் உட்காரும் அளவுக்கு குண்டாக இருந்த பெண்: பின்னர் நடந்த அதிசயம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் விமானத்தில் பயணிக்கும் போது மூன்று விமான இருக்கை டிக்கெட்களை வாங்கும் அளவுக்கு குண்டாக இருந்த பெண் தற்போது உடல் இளைத்து அசத்தலாக காட்சியளிக்கிறார்.

ரச்சேல் ஏயிர்ஸ் (45) என்ற பெண் 134 கிலோ எடையும் மிகவும் குண்டாக இருந்தார்.

விமானத்தில் ரச்சேல் பயணித்தால் மூன்று பேருக்கு தேவையான இருக்கை அவருக்கு தேவைப்பட்டது.

இதனால் அதற்கான டிக்கெட்களை சேர்த்து எடுக்கவேண்டிய பரிதாபமான நிலையில் ரச்சேல் இருந்தார்.

இதனால் மன உளைச்சலுக்கும், அவமானத்துக்கும் பலமுறை ஆளான ரச்சேல் அதிரடியாக உடலை குறைக்க முடிவெடுத்தார்.

அதன்படி சரியான வழிகாட்டுதலின் படி உணவு கட்டுபாடு, உடற்பயிற்சி மேற்கொண்டு தற்போது பாதிக்கு பாதி எடை குறைந்து அழகு தேவதையாக காட்சியளிக்கிறார்.

இது குறித்து ரச்சேல் கூறுகையில், எனது தந்தை என்னை போலவே மிகவும் குண்டாக இருந்தார். இதனால் நீரிழிவு நோய் போன்ற பல வியாதிகளால் கஷ்டப்பட்டார். அவருக்கு 20 சதவீதம் கண்பார்வையும் பறிபோனது.

இது போன்ற நிலை எனக்கும் வரக்கூடாது என எண்ணி கடுமையான விடயங்களை மேற்கொண்டு உடல் எடையை குறைத்தேன்.

தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்