அகதி இளைஞரின் கபட நாடகம் அம்பலம்: கொந்தளித்த பிரித்தானிய தாய்மார்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் இப்ஸ்விச் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் அகதி இளைஞர் ஒருவர் வயதை குறைத்து நிர்வாகத்தை ஏமாற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கபட நாடகம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் அந்த இளைஞர் நாட்டைவிட்டு வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது.

இப்ஸ்விச் பகுதியில் அமைந்துள்ள ஸ்டோக் உயர்நிலை பாடசாலையில் 11 ஆம் வகுப்பில் இளைஞர் ஒருவர் புதிதாக சேர்ந்துள்ளார்.

குறித்த இளைஞரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட சக மாணவர்கள் தங்களுக்குள் விவாதித்தது மட்டுமின்றி, தங்கள் பெற்றோரிடமும் தகவல் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி குறித்த இளைஞரின் பேஸ்புக் புகைப்படங்களையும் மாணவர்கள் வெளியிட்டு விவகாரத்தை அம்பலப்படுத்தினர்.

இதனையடுத்து சில தாய்மார்கள் பாடசாலை நிர்வாகத்தை அணுகி இச்சம்பவத்தை விசாரிக்க கோரிக்கை விடுத்தனர்.

மேலும் சில தாய்மார்கள் குறித்த இளைஞர் மீது உரிய விசாரணை மேற்கொள்ளும்வரை தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதையும் நிறுத்தினர்.

இதனால் கடும் நிர்பந்தத்திற்கு உள்ளான ஸ்டோக் உயர்நிலை பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்தது.

இதனையடுத்து நடந்த விசாரணையில், 30 வயதான அந்த இளைஞர் தமது வயதை 15 என குறைத்து ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளதும்,

பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இரானிய நாட்டவரான Siavash Shahs என்ற அந்த இளைஞர் சுமார் 6 வார காலம் ஸ்டோக் பாடசாலையில் 15 வயது சிறுவன் என ஏமாற்றியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் அவரது புகலிட கோரிக்கை குறித்த காரணங்களால் நிராகரிக்கப்பட்டால், அவர் பிரித்தானியாவை விட்டு வெளியேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்