லண்டனில் பட்டப்பகலில் காரில் இருந்த நபரை கத்தியால் தாக்கிய நபர்! வீடியோவில் இருந்த நபர் குறித்த தகவல் வெளியானது

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் பரபரப்பு மிகுந்த சாலையில் கத்தியை வைத்து காரில் இருப்பவர்களை மிரட்டிய நபர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Croydon பகுதியில் இருக்கும் பரபரப்பு மிகுந்த சாலையில் கடந்த மே மாதம் 30-ஆம் திகதி அடையாளம் தெரியாத நபர், காரின் உள்ளே இருந்த நபர்களை நோக்கி பட்டப் பகலில் கத்தியை வைத்து மிரட்டிக் கொண்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியதால், லண்டன் மக்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.

இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே லண்டனில் கத்தி குத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது போன்ற தாக்குல்களால் தற்போது வரை 70-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குலில் ஈடுபட்ட நபரின் பெயர் Joshua Gardner எனவும் 17 வயதில் இருக்கும் அந்த இளைஞருக்கு 18 வயது ஆகப்போகிறது எனவும் hornton Heath பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான வழக்கு வரும் திங்கள் அன்று நடைபெறவுள்ளதாகவும், அன்றே கூட நீதிபதி தண்டனை அறிவிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. Joshua Gardner சம்பவ தினத்தன்று சைக்கிளில் வந்துள்ளார்.

அப்போது அவர் திடீரென்று தன் முன்னே சென்ற நீல நிற VW காரை நிறுத்தி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதுமட்டுமின்றி திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், காரின் உள்ளே இருந்தவர்களை ஆக்ரோசமாக தாக்குவதற்கும் முயற்சி செய்தார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக காரின் உள்ளே இருந்த நபருக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை. அவர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காரின் உள்ளே இருந்த வெளியே ஓடினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்