எல்லோரும் சாக போகிறோம்: பறக்கும் விமானத்தில் இந்திய பெண் செய்த அதிர்ச்சி செயல்...வெளியான பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியா செல்லும் விமானத்தில் குடிபோதையில் இந்திய வம்சாவளி பெண் செய்த செயலுக்கு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த கிரண் ஜக்தேவ் (41) என்ற பெண் கடந்த ஜனவரி மாதம் ஸ்பெயிலிருந்து பிரித்தானியாவின் கிழக்கு மிட்லாண்ட்ஸ் நோக்கி செல்லும் விமானத்தில் சென்று கொண்டிருந்தார்.

விமானம் கிளம்புவதற்கு முன்னர் ஆறு பீர் வகை மதுபானங்களை கிரண் குடித்துள்ளார்.

பின்னர் விமானத்தில் ஏறியபின்னர் மேலும் அதிகளவு மது குடித்துள்ளார்.

இதையடுத்து போதையில் முன் சீட்டில் உட்கார்ந்திருந்த ஆட்சம் பாதித்த குழந்தையை எட்டி உதைத்த கிரண், பின்னர் நாம் எல்லோரும் சாக போகிறோம் என கத்தி அனைவரையும் அதிர வைத்துள்ளார்.

இப்படி அராஜகம் செய்த கிரணை பின்னர் விமான நிலையத்தில் பொலிசார் கைது செய்தனர்.

அவர் மீது நீதிமன்ற விசாரணை நடந்து வந்த நிலையில், வேண்டுமென்றே விமான ஊழியர்கள் தனக்கு அதிகளவு மது கொடுத்ததாக குற்றஞ்சாட்டினார்.

இதை ஏற்காத நீதிமன்றம் கிரண் செய்தது குற்றம் என தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தற்போது தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்