ஆரம்பமானது அண்ணன்- தம்பி சண்டை: அரண்மனையில் இருந்து வெளியேறும் ஹரி- மெர்க்கல் தம்பதி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இளவரசர் வில்லியம் உடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஹரி - மெர்க்கல் தம்பதியினர் அரண்மனையை விட்டு விரைவில் வெளியேற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கர்ப்பிணி மேகன் (37) தன்னுடைய கணவர் ஹரி (34) உடன் கென்சிங்டன் அரண்மனையிலிருந்து வெளியேறி தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஃபிரோமோர் ஹவுஸிற்கு செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஃபிரோமோர் ஹவுஸில் 10 அறைகள் உள்ளன. அவர்கள் தங்களுக்கு பிடித்தமான நபருக்கு அருகில் இருக்க விரும்புகிறார்களாம்.

ஏப்ரலில் பிறக்க உள்ள தங்களுடைய குழந்தைக்காக, அடுத்த வருடத்திற்குள் முழுவதுமாக அரண்மனையை விட்டு வெளியேறிவிடுவார்கள் என கூறப்படுகிறது.

இதற்கான காரணம், வில்லியம் கொடுத்த அதிக அழுத்தத்தின் காரணமாகவே, ஹரி தன்னுடைய மனைவியுடன் அரண்மனையிலிருந்து வெளியேறுவதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஹரி, தங்களுடைய அறை வில்லியம் - கேட் அறைக்கு அடுத்து இருப்பதை விரும்புவதில்லை எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக ஃபிரோமோர் ஹவுஸில் தான் ஹரி மெர்க்கல் திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தங்களுடைய சொந்த பணத்தை பயன்படுத்தியே ஹரி அதனை வாங்க விரும்பினார். ஆனால் ராணி பல பவுண்டுகளை கொடுத்து அதனை வாங்கி கொடுத்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்