ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவுக்கு எதிர்ப்பு: பிரித்தானிய அமைச்சர் பதவி விலகல்

Report Print Kabilan in பிரித்தானியா

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டு போக்குவரத்துத் துறை ராஜாங்க அமைச்சர் ஜோ ஜான்சன் பதவி விலகியுள்ளார்.

பிரித்தானியா கடந்த 2016ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தி, எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

இதற்கான முறையான நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார்.

ஆனால், பிரித்தானியாவின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியுறவுத் துறை அமைச்சர் போரீஸ் ஜான்சன் பதவி விலகினார்.

இந்நிலையில், இவரது சகோதரரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான ஜோ ஜான்சனும் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனை அவரது சகோதரர் போரீஸ் ஜான்சன் வரவேற்றுள்ளார். பிரதமர் தெரசா மேவுக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்