பிரித்தானிய சாலையில் கார் விபத்து: குழந்தை உட்பட 4 பேர் பரிதாப பலி! 3 பேர் படுகாயம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தில் சாலையில் நடைபெற்ற கார் விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் ஷெபீல்ட் பகுதியில், மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் மீது வேகமாக வந்த வோக்ஸ்வாகன் கால்ப் கார் மோதியுள்ளது.

இதில் ஒரு வயது குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், 23, 17 மற்றும் 18 வயதுள்ள மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிசார் தரப்பில் கூறுகையில், விபத்தில் 35, 50 வயதில் இரண்டு ஆண்களும், 41 வயதுள்ள ஒரு பெண்ணும் சம்பவ இடத்தியிலேயே பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒரு வயது குழந்தை அடுத்த சில நிமிடங்களில் உயிரிழந்தது.

3 வயது குழந்தை உட்பட மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 22 வயது பெண்ணின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்