இளவரசி மேகன் மெர்க்கலின் உதவியாளர் திடீர் ராஜினாமா: என்ன நடக்கிறது அரண்மனையில்?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் திருமணத்தில் பெரிதும் உதவிகரமாக இருந்த மேகனின் உதவியாளர் திடீரென தனது வேலையை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஏற்கனவே மேகன் மீது மகாராணியார் கோபமாக இருந்ததாக ஒரு செய்தி வெளியான நிலையில் என்ன நடக்கிறது பிரித்தானிய அரண்மனையில் என்னும் கேள்வி எழுந்துள்ளது.

அரண்மணையில் பணி புரிவதைக் குறித்து பலரும் கனவு காணும் நிலையில் மேகனுக்கு நெருக்கமான தனிப்பட்ட உதவியாளர் ஒருவர், தான் பொறுப்பேற்றபின் ஆறே மாதங்களில் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

Melissa என்ற அந்த பெண் ஹரி மேகன் திருமணத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றியதாக கூறப்படுகிறது.

அவரது ராஜினாமா, அரண்மனையில் உள்ள அனைவருக்கும் பெரிய இழப்பு என்று அரண்மனை வட்டாரத்தில் உள்ள பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் தெரிவித்தார்.

மேகன் நடந்து கொள்ளும் முறை குறித்து மகாராணியார் ஹரியை எச்சரித்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியானதையடுத்து இந்த சம்பவமும் நடந்துள்ளதால் அது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திருமணத்தின்போது ஒரு குறிப்பிட்ட நகையை மேகன் அணிய விரும்பியதாகவும், அது கிடைக்கவில்லை என்பதால் மேகன் கோபப்பட்டதாகவும், இதைக் கேள்விப்பட்ட மகாராணியார் ஹரியை எச்சரித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

மேகன் விரும்பியதையெல்லாம் அணிய முடியாது, நான் என்ன கொடுக்கிறேனோ அதைத்தான் அவர் அணிய வேண்டும் என்று மகாராணியார் கூறினாராம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்