மாரடைப்பால் இறந்த மனைவி, புற்றுநோயால் இறந்த மகள்...துடித்து போன கணவரின் உருக்கமான பதிவு

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் மனைவி இறந்த சில வருடத்தில் மகளும் உயிரிழந்த நிலையில் தந்தை உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

Merseyside கவுண்டியை சேர்ந்தவர் லூசி மோரோனி (10). இவளின் தாய் சில வருடங்களுக்கு முன்னர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதையடுத்து லூசி தனது தந்தை மற்றும் சகோதரி ஏமியுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்தாண்டு ஜூலை மாதம் லூசிக்கு உடல்நல கோளாறு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு Diffuse Intrinsic Pontine Glioma என்ற வினோத புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

இதற்கான சிகிச்சையை லூசி எடுத்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நோய் முற்றியதன் காரணமாக உயிரிழந்தார்.

இதையடுத்து மனைவி மற்றும் மகளை இழந்து தவிக்கும் லூசியின் தந்தை உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், உன் தாய் இறப்பதை கண்கூடாக நான் பார்த்தேன், அதே போல உன் இறப்பையும் பார்த்தது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது லூசி.

என் கனவு மகளான நீ, தூய இதயத்துடன் மற்றவர்கள் மேல் அன்பும் அக்கறையும் கொண்டவளாக இருந்தாய்.

அந்த கொடிய நோய் உன் வாழ்க்கையை எடுத்து கொள்ளாமல் இருக்க என்னால் முடிந்தவரை போராடினேன்.

ஆனால் முடியவில்லை, என்னை மன்னித்துவிடு. நீ இப்போது உன் தாயுடன் இணைந்துவிட்டாய் என நம்புகிறேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்