ஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்: என்ன விலை தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

மறைந்த பிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய தானியங்கி சக்கர நாற்காலி ஏலம் விடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானியும், இயற்பியல் ஆய்வாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் தனது 21வது வயதில் தசையிழப்பு நோயால் பாதிக்கப்பட்டதால் உடல் உறுப்புகள் செயலிழந்தன. பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சக்கர நாற்காலியில் வலம் வந்த அவர், தான் பேச விரும்பியதை கணினி மூலம் கூறினார்.

கடந்த மார்ச் மாதம் தனது 76வது வயதில் ஸ்டீபன் ஹாக்கிங் காலமானதை அடுத்து, அவர் பயன்படுத்திய தானியங்கி சக்கர நாற்காலி லண்டனில் ஏலம் விடப்பட்டது.

ஹாக்கிங்கின் சக்கர நாற்காலி உடல் குறைப்பாட்டின் அடையாளம் அல்ல, நவீன அறிவியல் அடையாளம் என்று சொல்வார்கள்.

அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த சக்கர நாற்காலியை $393,000-க்கு ஒருவர் ஏலம் எடுத்தார்.

இந்தத் தொகை எதிர்பார்த்தை விட இரு மடங்கு அதிகம் என கிறிஸ்டி ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers