உறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் உறவின்போது படுக்கையில் இருந்து விழுந்து படுகாயமடைந்த 46 வயது பெண்மணிக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

லண்டன் நகரில் உள்ள தமது குடியிருப்பில் கிளாரி பஸ்பி என்ற 46 வயது பெண்மணி king-size double divan படுக்கை ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார்.

சம்பவத்தன்று தமது துணையுடன் பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கும்போது கிளாரி படுக்கையில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் அதன் பின்னர் சக்கர நாற்காலியின் உதவியை நாடிவருகிறார்.

2013 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தை அடுத்து படுக்கையை தரமற்ற வகையில் உருவாக்கி விற்பனைக்கு அனுப்பிய நிறுவனத்தின் மீது கிளாரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கோளாரான படுக்கையால் தமது வாழ்க்கை பாதிப்படைந்ததாக கூறி சுமார் ஒரு மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தை நாடினார்.

ஆனால் குறிப்பிட்ட ரக படுக்கையை பல வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றதாகவும், எவரும் இதுபோன்ற புகாரை எழுப்பவில்லை எனவும் அந்த நிறுவனம் வாதிட்டுள்ளது.

மட்டுமின்றி தாம் படுக்கையில் இருந்து தவறி விழ நேர்ந்த காரணத்தை கிளாரியால் நீதிமன்றத்தில் நிறுவ முடியாமலும் போனது.

இதனையடுத்து இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிமன்றம் கிளாரியை இழப்பீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்