தேனிலவில் காணாமல் போன மனைவியை கைவிட்டு தப்பிய கணவன்: எட்டு ஆண்டுகள் சிறை

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தேனிலவுக்கு சென்ற இடத்தில் கடலில் காணாமல் போன தன் மனைவியை தேடாமல் விட்டு விட்டு, தப்பி வந்த கணவன் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரித்தானிய மாலுமியான Lewis Bennett (41) தனது புது மனைவியான Isabella Hellmannஉடன் (41) தேனிலவுக்காக படகில் நீண்ட பயணம் தொடங்கினார்.

Bahamas பகுதியில் வரும்போது படகிலிருந்த Isabella மாயமானார்.

காணாமல் போன மனைவியை தேட எந்த முயற்சியும் எடுக்காத Bennett, உயிர் காக்கும் படகொன்றில் ஏறி தப்பினார்.

சுமார் 45 நிமிடங்களுக்குப்பின் ஆபத்து நேர சிக்னல் கொடுத்த அவரை, நான்கு மணி நேரத்திற்கு பின்னரே கடலோரக் காவல் படையினர் கண்டுபிடித்தனர்.

கணவனும் மனைவியும் பயணித்த படகைத் தேடிச் சென்றபோது படகு கவிழ்ந்து கிடந்தது.

Isabellaவின் உடல் கடைசிவரை கிடைக்கவேயில்லை.

படகை ஆராய்ந்தபோது அதில் சில துளைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதுவும் அந்த துளைகள் படகின் உள்ளிருந்து போடப்பட்டிருந்தன.

Bennett தனது மனைவியின் சொத்தை அடைவதற்காக வேண்டுமென்றே அவரைக் கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்ததோடு அவர் மீது கொலைக் குற்றமும் சுமத்தப்பட்டது.

பின்னர் உள் நோக்கம் இல்லாவிட்டாலும், தனது மனைவியின் மரணத்துக்கு மறைமுகமாக காரணமாக இருந்ததற்காக அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்