டயானாவின் இரட்டை அர்த்த பிறந்த நாள் வாழ்த்து அட்டை: பிரித்தானிய இளவரசியின் குறும்பு முகம்

Report Print Fathima Fathima in பிரித்தானியா

சாதுவான பிரித்தானிய இளவரசி இன்னொரு பக்கம் பயங்கர குறும்புக்காரர் என்பதை நிரூபிக்கும் தகவல்கள் சில சமீபத்தில் வெளியாகியுள்ளன.

தனது அக்கவுண்டண்டுக்கு பிரித்தானிய இளவரசி அனுப்பிய குறும்பு கொப்பளிக்கும் வார்த்தைகளைக் கொண்ட பிறந்த நாள் அட்டை ஒன்றின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இளவரசி டயானாவின் நண்பரும் அக்கவுண்டண்டுமான Anthony Burrage என்பவருக்கு இந்த பிறந்த நாள் வாழ்த்து அனுப்பப்பட்டுள்ளது.

Sleeping Beauty என்னும் பிரபல கதாபாத்திரத்தின் படம் இடம்பெற்றுள்ள அந்த பிறந்த நாள் அட்டையில் கையில் பட்ட ஒரு சிறு குத்து, Sleeping Beautyயைத் தூங்கச் செய்தி விட்டது என்று அச்சிடப்பட்டிருந்தது.

ஆனால் அந்த அட்டையின் உட்புறம், ஆம்! பெரியவர்களால் மட்டும்தான் விழித்துக் கொண்டே இருக்க முடியும், என இரு பொருள்பட எழுதப்பட்ட வாக்கியத்தின் கீழ், இளவரசி டயானா தனது கைப்பட, காலம் தாழ்த்திய பிறந்த நாள் வாழ்த்துகள் என எழுதி, டயானா என கையொப்பமிட்டிருந்தார்.

அந்த அட்டையை ஏலத்தில் எடுத்துள்ள, தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத ஒரு பிரபலம், டயானா குறும்பு மிக்க பிறந்த நாள் அட்டை அனுப்புவதை விரும்புகிறவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அவரது மிக நெருங்கிய நண்பர்களுக்கு இப்படி இரட்டை அர்த்த ஜோக்குகளை அனுப்புவார் என்பதை எண்ணும்போது அவர் பயங்கர குறும்புக்காரராகத்தான் இருந்திருக்க முடியும் என்பது நன்றாக புரிகிறது என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்