மோசமான வார்த்தைகளால் திட்டிய பெண்.. முகத்தில் கேக்கை வீசி பதிலடி கொடுத்த ஓட்டல் பணியாளர்! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஓட்டல் பணியாளர்கள் மோசமாக திட்டிய வாடிக்கையாளர் பெண்களின் முகத்தில் கேக்கை வீசிய வீடியோ வைரலாகி வருகிறது.

லண்டனில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு 2 பெண்கள் வந்துள்ளனர். அவர்கள் அமர்திருந்த மேஜைக்கு வந்த பணியாளர், சாப்பிடுவதற்கு என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆனால், குறித்த பெண்களில் ஒருவர் அதிகார தோணியில் பணியாளரை மோசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது சகபணியாளர் ஒருவர் தன் கையில் கொண்டு வந்த கேக்கை, திட்டிக்கொண்டிருந்த பெண்ணின் முகத்தில் முழுமையாக அப்பினார். இதனைத் தொடர்ந்து, அருகில் இருந்த பெண் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எடுத்து பணியாளர் மீது ஊற்றினார்.

இவர்களது சண்டை தொடர்பான வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்