ஷாப்பிங் செய்து கொண்டிருந்தவர்கள் கண் முன்னே மாடியிலிருந்து விழுந்த பெண் பலி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவின் Manchester பகுதியில் பொதுமக்கள் பிஸியாக ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் நேரத்தில் மாடியிலிருந்து ஒரு பெண் விழுந்து பலியானார்.

கார் பார்க்கிங் ஒன்றின் மாடியிலிருந்து விழுந்த அந்த பெண்ணை மருத்துவக் குழுவினர் மீட்க முயற்சித்தும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

இதனால் அந்த பகுதியில் பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் ட்ராம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிஸியாக ஷாப்பிங் செய்து கொண்டிருந்த நேரத்தில் அந்த பெண் விழுந்த அதே நேரத்தில் இன்னொருவருக்கும் காயம் ஏற்பட்டது, அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்தனர்.

அந்த பெண் எப்படி விழுந்தார் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்