மனைவியின் சடலத்துடன் குழந்தைகளுக்கு ஊர் சுற்றிக் காண்பித்த கணவர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் மனைவியை கொலை செய்து சடலத்தை காரில் வைத்துக்கொண்டே, காணாமல் போய்விட்டதாக ஊர் சுற்றிய கணவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த கிறிஸ்டோபர் கெர்ரெல் (35), தன்னுடைய 28 வயதான காதலி ஹொல்லியின் தலையில் சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் டீ குடித்துக்கொண்டே சமையலறையில் சிதறி கிடந்த ரத்தத்தை துடைத்து விட்டு, அவருடைய உடல் மற்றும் துணிகளை பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டியுள்ளார்.

10 நிமிடம் கழித்து தன்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, மனைவி துணிகளை எடுத்துக்கொண்டு ஓடிப்போய்விட்டதாகவும், நான் குழந்தைகளுடன் அவளை தேடிக்கொண்டிருக்கிறேன் என செல்போன் மற்றும் பேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவருடைய உடலை காரின் பின்பக்கத்தில் வைத்துவிட்டு, தன்னுடைய மூன்று குழந்தைகளையும் காரில் அழைத்துக்கொண்டு, மனைவியை தேடுவதை போல நடித்துள்ளார்.

பண்ணை தோட்டத்திற்கு சென்ற அவர், குழந்தைகளை அருகில் விளையாட வைத்துவிட்டு, ட்ராக்டர் மூலம் குழிதோண்டி மனைவியின் சடலத்தை அடக்கம் செய்துள்ளார்.

அம்மா எங்கே என குழந்தைகள் கேட்டதற்கு, காணாமல் போய்விட்டார். தேடி கண்டுபிடிப்போம் என தொடர்ந்து குழந்தைகளுடன் ஊர் சுற்றியுள்ளார். இதற்கிடையில் சம்பவம் அறிந்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் 4 நாட்களுக்கு பிறகு ஹொல்லியின் சடலத்தை கண்டுபிடித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கினை விசாரித்த நீதிபதி, குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த சம்பவம் குறித்து அவருடைய தோழி, இறப்பதற்கு முன்பு ஹொல்லி எனக்கு மெசேஜ் செய்திருந்தாள். 5 வருட வாழ்க்கையில் அவருடைய கணவர் அதிகமான வன்முறைகளில் ஈடுபடுவதால், அவரை பிரிந்து ஒரு புது வாழ்க்கையை துவங்க விரும்புவதாக எனக்கு அனுப்பியிருந்தாள் என கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்