46 முறை கத்தியால் குத்திய கணவன்! பதிலுக்கு மனைவி செய்த காரியம்... நெகிழ்ந்துபோன நீதிபதி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் 46 முறை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கணவனை மன்னித்து, சிறைத்தண்டனை முடிந்த பிறகு மீண்டும் அவனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக மனைவி தெரிவித்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த மைக்கேல் பர்னார்ட் (25) தன்னுடைய 21 வயதான மனைவி ஷானோன் பார்னார்ட்க்கு தெரியாமல், மது அருந்தி, நைட்ரஸ் ஆக்சைடு எடுத்து வந்துள்ளார். மேலும், ஒரு பெண்ணை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

தனக்கு இழைத்த துரோகம் பற்றி தட்டிக் கேட்டதற்காக சமையலறையில் இருந்த கத்தியை கொண்டு, மைக்கேல் 46 முறை மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மைக்கேல் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு வழக்கினை விசாரித்த நீதிபதி குற்றவாளிக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அப்போது ஷானோன் , என்னுடைய கணவர் சிறையிலிருந்து வெளியானதும், அவரை மன்னித்து மீண்டும் சேர்ந்து வாழ விரும்புகிறேன். வாரத்திற்கு 2 முறை அவரை சிறையில் சந்திக்க எனக்கு அனுமதி கொடுங்கள் என நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

நாங்கள் இருவருமே ஒருவொருக்கொருவர் புரிந்துகொண்டு ஒரு நல்ல குடும்பத்தை அமைக்க விரும்புகிறோம் என தெரிவித்த ஷானோன், தான் அவரை அதிக அளவு அன்பு செய்வதாகவும், அவரும் தன்னை அன்பு செய்வதாகவும் தெரிவித்தார்.

இதனை கேட்டு நெகிழ்ந்த நீதிபதி, சிறையில் சந்திக்க அனுமதியளித்ததோடு, பலத்த காயங்களில் இருந்து உயிர் பிழைத்திருக்கும் உங்கள் மனைவி ஒரு அதிர்ஷ்டசாலி என தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து ஷானோன் கூறுகையில், அன்றைய தினம் நான் என்னுடைய படுக்கையில் இருந்து எழுந்த போது , கையில் ஒரு கத்தியுடன் என்னுடைய கணவர் என்னை நோக்கி வந்தார்.

நான் பயத்தில் என்னுடைய தந்தைக்கு போன் செய்கிறேன் என கத்தினேன். ஆனால் என்னுடைய கணவர், "நீ சாகப்போகிறாய்" என கூறிக்கொண்டு, என் மீதி ஏறி உட்கார்ந்து வயிற்றுப் பகுதியில் சரமாரியாக கத்தியால் குத்த ஆரம்பித்தார்.

என்னுடைய அலறல் சத்தம் கேட்டு வந்த கணவரின் பெற்றோர், நான் இருந்த நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

என்ன செய்துகொண்டிருக்கிறாய் என கணவரை அதட்டினர். அப்போது என்னுடைய கண்கள் உருள ஆரம்பித்துவிட்டன. நான் இறக்கப்போகிறேன் என கூறியதும் அவர்கள் என்னை வேகமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்