புற்றுநோயால் இறக்க போவதாக அனைவரையும் ஏமாற்றிய இளம்பெண்: வெளியான திடுக்கிடும் காரணம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் பணத்துக்காக தனக்கு புற்றுநோய் இருப்பதாக கூறி மோசடி செய்த இளம்பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Merseyside கவுண்டியை சேர்ந்தவர் கீரா பிரேபோர்ட் (25). பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் தனக்கு மூன்று விதமான புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக தனது பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கீரா கூறியுள்ளார்.

நோய் காரணமாக தான் விரைவில் இறந்துவிடுவேன் எனவும் கூறியுள்ளார். இது தொடர்பான சிகிச்சை ஆவணங்களையும் அவர்களிடம் காட்டியுள்ளார்.

தனக்கு சிகிச்சை எடுக்க அதிக பணம் தேவைப்படுதாக கீரா கூறிய நிலையில் பல்வேறு தரப்பிலிருந்து அவருக்கு நிதியுதவி கிடைத்தது.

தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி மனிதர்கள் கீராவுக்கு நிதியுதவி செய்ய தொடங்கினார்கள்.

JustGiving என்ற வலைதள பக்கம் மூலம் நிதி வசூல் செய்யப்பட்ட நிலையில் £19,000 வரை நிதி கிடைத்தது.

பின்னர் தான் மருத்துவ ஊழியர் ஒருவர் மூலம் கீராவுக்கு புற்றுநோயே வரவில்லை எனவும், அவர் வைத்திருந்த சிகிச்சை ஆவணங்கள் அனைத்தும் போலி எனவும் தெரியவந்தது.

இது எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதையடுத்து பொலிசார் கீராவை கைது செய்தனர்.

நிதி வசூல் செய்த பணத்தில் பெரும்பகுதியை வைத்து தனது கடன்களை அடைத்த கீரா, சொகுசான பொருட்களை வாங்கியதும் தெரியவந்தது.

இதனிடையில் சமீபத்தில் நீதிமன்றத்தில் கீரா ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரின் செயல் வெறுக்கத்தக்க செயல் என கூறிய நீதிபதி இரண்டாண்டு சிறை தண்டனை விதித்தார். பின்னர் அது இரண்டாண்டுகளுக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

கீரா 35 நாட்களுக்கு சமூக சேவை செய்யவேண்டும் எனவும், இரவு 7 மணியிலிருந்து காலை 6 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதோடு ஓராண்டுக்கு கீராவை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்