பெற்ற தாயை கொன்றுவிட்டு கட்டியணைத்து கதறி அழுத மகன்: சோக சம்பவத்தின் பின்னணி காரணம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் பெற்ற தாயை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, கட்டியணைத்து கதறி அழுதுள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த பியோனா ஃபிஷர் (51), தனியார் நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த ஏப்ரல் 27ம் தேதியன்று தன்னுடைய அறையில் உறங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அவருடைய அறைக்கு வந்த 22 வயதான மகன் தாமஸ், கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு தாயை குத்தி கொலை செய்துள்ளான்.

இதில் பியோனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், தாமஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், நான் கண்ணை மூடிக்கொண்டு என்னுடைய அம்மாவை கத்தியால் குத்தினேன்.

பின்னர் கண்ணை திறந்த போது அவர் இறந்து கிடந்தார். எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல், அவரை கட்டியணைத்து 15 நிமிடம் கதறி அழுதுகொண்டிருந்தேன் என கூறியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் தாமஸை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவருக்கு ஸ்கிசோஃப்ரினியா என்ற மனநோய் இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று வழக்கினை விசாரித்த நீதிபதி, குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவர் முழுமையாக பூரணமடைந்துவிட்டார் என மருத்துவ அறிக்கை கூறிய பிறகு தான் பரோல் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உத்தரவிட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்