பிரித்தானியாவில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி: மூன்று பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் காலை நேரத்தில் தனியாக நடந்து சென்ற பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Yorkshire நகரத்தின் Elland பகுதி அருகே இருக்கும் 20 வயது மதிக்கத்தக்க பெண் கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் திகதி Cromwell Bottom Nature Reserve மற்றும் Colliers Arms pub-க்கு இடையில் இருக்கும் கால்வாய் பகுதியில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு தனியாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது இந்த பெண்ணைக் கண்ட மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

இதனால் பெண் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகிறோம். யாரேனும் இந்த சம்பவம் குறித்து தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

தற்போது அந்த கால்வாய் பகுதி வழியே யாரும் செல்ல வேண்டாம் எனவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் இந்த சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான பெண்ணின் பெயர் மற்றும் அவரின் முழுவிபரங்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்