குடிபோதையில் 244 பேர் பயணிக்கும் விமானத்தை இயக்கவிருந்த விமானி: இறுதி நேரத்தில் நடந்த பரபரப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் இருந்து ஜப்பான் நோக்கி கிளம்பவிருந்த விமானத்தை குடி போதையில் இயக்கவிருந்த விமானி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

லண்டனில் உள்ள ஹித்ரோ விமான நிலையத்தில் இருந்து ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று ஜப்பானின் டோக்கியோ நோக்கி கிளம்ப தயாராக இருந்தது.

இந்த விமானத்தில் 244 பயணிகள் வரை பயணிக்கலாம்.

குறித்த விமானத்தை இயக்கவிருந்த துணை விமானியான கட்ஷுடோசி ஜிட்சுகவா (42) என்பவர் முழு குடிபோதையில் இருந்துள்ளார்.

விமான நிலையத்தில் உள்ள பேருந்தின் ஓட்டுனர் ஒருவர் ஜிட்சுகவாவுடன் பேசிய போது அவர் மது அருந்தியிருப்பதை கண்டுப்பிடித்தார்.

இது குறித்து உடனடியாக அவர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த நிலையில் ஜிட்சுகவாவிடம் பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது ஒரு விமானி அருந்தவேண்டிய மதுவின் அளவை விட 10 மடங்கு மதுவை ஜிட்சுகவா குடித்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். ஜிட்சுகவாவின் தண்டனை விபரம் வரும் 29-ஆம் திகதி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

ஜிட்சுகவாவின் செயல் காரணமாக விமானமானது 69 நிமிடங்கள் தாமதமாக கிளம்பி சென்றது. விமானியின் செயலுக்காக பயணிகளிடம் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்