முதல் குழந்தை பிழைக்காது என்று கூறப்பட்ட நிலையில் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்த வித்தியாசமான தம்பதி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய தம்பதியான Nathan மற்றும் Laura Phillips இரண்டாவது குழந்தைக்கு பெற்றோராகியுள்ளனர். இதில் என்ன விந்தை என்று நீங்கள் யோசிக்கலாம்.

Nathan மற்றும் Laura இருவருமே dwarfism என்ற குறைபாடு கொண்டவர்கள். Snow White என்ற படத்தில் நடிக்கும்போது சந்தித்துக்கொண்ட Nathan மற்றும் Laura இருவருக்கும் வெவ்வேறு வகை குறைபாடு.

Lauraவுக்கு Achondroplasia என்னும் குறைபாடு, அவர் 4 அடி 1 இஞ்ச் உயரம் கொண்டவர்.

Nathan, Pseudoachondroplasia என்னும் குறைபாடு கொண்டவர், அவரது உயரம் 3 அடி 11 இஞ்ச் . நான்கு ஆண்டுகளுக்குமுன் Laura தனது முதல் மகனைப் பெற்றபோது, அவனுக்கு பெற்றோர் இருவரின் குறைபாடுமே கலந்திருந்தது.

அது மிகவும் அபூர்வம் என்பதால், அவன் சில மணி நேரங்களே உயிருடன் இருப்பான் என்று மருத்துவர்கள் கணித்த நிலையில் அற்புத வண்ணமாக அவன் இப்போது தன் தம்பியையும் பார்க்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறான்.

இரண்டாவது முறை கர்ப்பமுற்றபோதும் பெற்றோருக்கு ஒரே கவலைதான், இந்த குழந்தைக்கு என்ன பிரச்சினை இருக்குமோ என்ற எண்ணம்தான் அது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக இரண்டாவது குழந்தையான Jax அம்மாவின் குறைபாடு மட்டுமே உடையவனாக பிறந்திருக்கிறான் என்பதில் பெற்றோர் இருவருக்குமே பெரிய நிம்மதி.

சிஸேரியன் முறையில்தான் Lauraவால் பிரசவிக்க முடியும் என்பதால், அவருக்கு கொடுக்கப்பட்ட மயக்க மருந்து குழந்தையையும் பாதித்ததால் அவனுக்கு ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதோடு, நோய்த் தொற்றும் ஏற்பட்டது பெற்றோருக்கு கவலையை ஏற்படுத்தியது.

என்றாலும் மருத்துவர்களின் தீவிர கவனிப்புக்கும் அக்கறைக்கும் பின் இப்போது Jax நன்றாக இருக்கிறான்.

தங்கள் வாழ்வில் மீண்டும் ஒரு ஒளி வந்தது போல் உணர்வதாக மகிழும் Nathan மற்றும் Lauraவுடன், தனக்கு ஒரு தம்பி பிறந்த மகிழ்ச்சியில் ஜூனியர் Nathanம் சேர்ந்து கொள்கிறான்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்