லண்டனிலுள்ள சவுதி தூதரகம் அருகே பலத்த வெடிச்சத்தத்தை தொடர்ந்து தீப்பற்றி எரியும் கட்டிடம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு அருகே அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 9.15 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பலத்த வெடிச்சத்தம் கேட்டதாகவும் அதைத் தொடர்ந்து தூதரகத்திற்கு அருகில் அமைந்துள்ள கட்டிடத்தில் தீப்பற்றியதாகவும் தெரிவித்தார்.

ஆறு தீயணைப்பு வாகனங்களில் வந்த 40 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட படங்களும் வீடியோக்களும் அந்த உணவகத்தில் பல அடி உயரத்திற்கு தீ ஜுவாலை பற்றி எரிவதைக் காட்டுகின்றன.

சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை. உணவகம் தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் கண்டு பிடிக்கப்படாத நிலையில், பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் குறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள தீயணைப்புத் துறையினர், தீப்பற்றியது சவுதி தூதரகத்தின் அருகிலுள்ள உணவகம்தானே தவிர, தூதரகம் அல்ல என்று தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கொலை செய்யப்பட்டதயடுத்து உலகம் முழுவதும் அதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில், லண்டனில் உள்ள சவுதி தூதரகத்தின் அருகில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதால் இவ்விளக்கம் தரப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்