ஹரியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெர்க்கல்: அவர் அணிந்திருந்த ஆடைகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

அவுஸ்திரேலியா, பிஜி, டானோ மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு 16 நாட்கள் இளவரசர் ஹரியுடன் சேர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மெர்க்கல் அணிந்திருந்த உடைகளின் மதிப்பு 130,000 பவுண்ட் என்பது தெரியவந்துள்ளது.

பிரித்தானியா இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல் அரசகுடும்ப சுற்றுப்பயணமாக அவுஸ்திரேலியா, பிஜி, டானோ மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு 16 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இவர்கள் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தங்களுடைய பயணத்தை தொடங்கிய போது, மெர்க்கல் கர்ப்பமாக இருக்கிறார் என்று கெங்ஸ்டன் அரண்மனை அறிவித்தது.

இந்நிலையில் இந்த 16 நாட்கள் சுற்றுப்பயணத்தின் போது இளவரசி மெர்க்கல் 30-க்கும் மேற்பட்ட ஆடைகளை மாற்றியுள்ளார்.

அதில் மெர்க்கலின் ஆடை மற்றும் அவர் அணிந்திருந்த அணிகலன்களின் மதிப்பு 130,107.50 பவுண்ட் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அதில், அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் நடந்த Geographical Society விருது வழங்கும் விழாவில், கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தால் ஆன Oscar de la Renta என்ற உடையை அணிந்திருந்தார்.

அதன் மதிப்பு 10,000 பவுண்ட் எனவும் பிஜிக்கு சென்ற போது அங்கு டின்னர் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சாபியா என்றழைக்கப்படும் நீலநிறத்திலான உடை அணிந்திருந்தார். அதன் மதிப்பு 1,095 பவுண்ட் ஆகும்.

இதைத் தொடர்ந்து Tonga நாட்டிற்கு சென்ற போது அங்கு நீளமான வெள்ளை நிற theia என்றழைக்கப்படும் உடை அணிந்திருந்தார். இதனுடைய மதிப்பு 780 பவுண்ட் ஆகும்.

அதன் பின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கோட் வடிவ ஆடை அணிந்திருந்தார். அதன் மதிப்பு 1,450 பவுண்ட், இதைத் தொடர்ந்து நியூசிலாந்தின் அரச மாளிகையில் நடந்த விழா ஒன்றில் அணிந்திருந்த ஆடையின் மதிப்பு 1,950 பவுண்ட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தின் போது மெர்க்கல் கழுத்தில் அணிந்திருந்த நெக்லசின் மதிப்பு 10,000 பவுண்ட் எனவும் காதில் அணிந்திருந்த காதனியின் மதிப்பு 5000 பவுண்ட் என்பதும் தெரியவந்துள்ளது.

இப்படி மொத்தமாக இந்த சுற்றுப்பயணத்திற்கு மட்டும் மெர்க்கலின் உடைகள் மற்றும் அணிகலன்களுக்கு 130,107.50 பவுண்ட ஆகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்