மனைவியை கொன்று இரத்தத்தை முகத்தில் பூசி செல்பி: கணவரின் வெறிச்செயல்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான இளம் பெண்ணை கொலை செய்து இரத்தத்தை முகத்தில் பூசி கொண்ட முன்னாள் கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நோர்போல்க் கவுண்டியை சேர்ந்தவர் கெரி மெக்அவுலி (32). இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. கெரிக்கு தனது கணவர் ஜோ ஸ்டோரே (27) உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அவரை பிரிந்து வாழ்ந்தார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கெரி வீட்டுக்கு வந்த ஜோ அவரை கொடூரமாக கொலை செய்தார்.

பின்னர் கெரி மீதிருந்த இரத்தத்தை தனது முகத்தில் பூசி கொண்ட நிலையில் செல்போனில் செல்பி எடுத்துள்ளார்.

இதன்பின்னர் அங்கிருந்து வெளியில் சென்றுள்ளார். அப்போது வெளியில் சென்றிருந்த கெரியின் தாய் லெஸ்லே மற்றும் சகோதரர் வீட்டுக்கு வந்தபோது கெரி சடலமாக இருந்ததை பார்த்து அதிர்ந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவம் நடந்த 43 நிமிடத்தில் பொலிசார் ஜோவை கைது செய்தனர்.

இது குறித்து லெஸ்லே கூறுகையில், என் மகளின் இறப்பை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.

கெரியை ஏற்கனவே கடந்த 2016-ல் ஜோ கொடூரமாக தாக்கினான்.

இது குறித்து பொலிஸில் புகார் அளித்த அவள், புகைப்படங்களையும் சமூகவலைதளங்களில் வெளியிட்டார்.

ஆனால் பொலிசார் சரியான நடவடிக்கையை ஜோ மீது எடுக்கவில்லை, அப்படி எடுத்திருந்தால் என் மகள் இன்று உயிரோடு இருந்திருக்கலாம் என கூறியுள்ளார்.

இதனிடையில் சிறையில் உள்ள அதிகாரிகள் ஜோ மீதான பழைய குற்றங்களையும் தற்போது சுமத்தப்பட்ட குற்றங்களையும் சரியாக ஆராயவில்லை என புகார் எழுந்துள்ளது.

இதற்கு போதுமான ஊழியர்கள் தங்களிடம் இல்லை என சிறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்