அந்த நாட்களில் ரத்தப்போக்கு ஏற்பட்டு கழிவறைக்கு சென்ற பெண் ஊழியர்: மறுப்பு தெரிவித்த முதலாளி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவில் அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்த வந்த 20 வயது இளம்பெண் ஒருவர் தனது மாதவிடாயின்போது ரத்தப்போக்கு அதிகமாகியதால் கழிவறைக்கு செல்வதற்கு அனுமதி மறுத்துவிட்டதை பதிவு செய்துள்ளார்.

20 வயது பெண் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளதாவது, அலுவலகத்தில் நடுத்தரவயது ஆண்களுடன் இணைந்து பணியாற்றுவது என்பது மிகவும் கடினமான ஒன்று.

எனது முதலாளிக்கு பெண்களின் மாதவிடாய் குறித்த அறிவு சுத்தமாக இல்லை. நான் அமர்ந்துபணியாற்றிக்கொண்டிருந்தபோது கழிவறைக்கு செல்ல முற்பட்டேன்.

அப்போது, எனது முதலாளி என்னிடம் வந்து எங்கு செல்கிறாய்? என்று கேள்வி எழுப்பினார். எனக்கு இன்று மாதவிடாய் காலம், ரத்தம் வழிந்தோடுகிறது, அதனால் நான் கழிவறைக்கு செல்ல வேண்டும் என கூறினேன்.

அதற்கு, உனக்கு சுத்தமாக இருக்கத்தெரியாதா? இப்படி பணிசெய்யும் நேரத்தை வீணடிக்கிறாய். உனக்கு கவனமாகவும், அடக்கமாகவும் இருக்கத்தெரியாதா என சத்தம்போட்டுள்ளார்.

இதனை கேட்ட பெண் ஊழியர், அப்படியென்றால் நான் எனது ரத்தப்போக்கை அடக்கிகொண்டு இருக்கவேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்கள் தங்களது மாதவிடாய் சுழற்சியை முடித்துக்கொள்ள வேண்டும். மேலும் இதுபோன்ற மாதவிடாய் காலத்தில், கழிவறைக்கு சென்று பெண்கள் அதிகமான நேரத்தை செலவிடுவதாக இதுபோன்ற ஆண்கள் நினைக்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள பள்ளிகளில் ஏறக்குறைய 15 வயதுக்குட்பவர்களுக்கு மாதவிடாய் குறித்து தெளிவாக தெரியவில்லை. இதுபற்றி போதிய கல்வியறிவு இல்லாத காரணத்தால் பெண்கள் கேலிக்கு ஆளாகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்