இங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமானது

Report Print Kavitha in பிரித்தானியா

இங்கிலாந்தில் முதல்முறையாக நேற்று முதல் கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியுமென சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.

நோயாளிகள் மருத்துவ நிபுணரின் பரிந்துரையின் பின்னர் கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடுமையான கை, கால் வலிப்பு உள்ள குழந்தைகள், கீமோதெரபி மூலம் வாந்தி அல்லது குமட்டல் கொண்ட மற்றும் ஸ்களீரோசிஸ் காரணமாக தசை விறைப்பு கொண்ட நோயாளிகளுக்கு கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் பரிந்துரை செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கஞ்சாவைப் பிரதானமாகக் கொண்ட மருந்துகள் நோயாளிகளுக்கு நிச்சயமாக உதவக்கூடிய சந்தர்ப்பங்களில் மட்டுமே மருத்துவ நிபுணர்கள் கஞ்சா மருந்துகளை பரிந்துரை செய்யமுடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சட்டம் நிச்சயமாக கஞ்சா புகைத்தலை சட்டபூர்வமாக்குவதற்கான ஒரு ஆரம்பமாக அமையாது எனவும் கஞ்சா புகைத்தலுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்குமெனவும் உள்துறை அமைச்சர் சஜித் ஜாவிட் உறுதியளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்